வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (08:42 IST)

இன்று ஆடிக்கிருத்திகை: பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை!

இன்று ஆடிக்கிருத்திகை: பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை!
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை வந்தாலும் ஆடி மாதம் வரும் கிருத்திகை மிகவும் புகழ் பெற்றது என்பதும் குறிப்பாக முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை அன்று பக்தர்கள் மிகப்பெரிய அளவில் வந்து தரிசனம் செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஒவ்வொரு வருடமும் திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் என்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தில் முக்கிய கோவில்களில் இன்று பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
முருகனின் அறுபடை வீடுகள் உள்பட அனைத்து முக்கிய முருகன் கோவில்களிலும் இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது