1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (07:58 IST)

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் திறக்கப்பட்ட கோயில்கள்: பக்தர்கள் பரவசம்!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று காலை முதல் கோயில்கள் திறக்கப்பட்டதி அடுத்து பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து இன்று காலை கொரோனா விதிமுறைகளின்படி கோயில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. காலை 6:00 மணிக்கு பக்தர்கள் கோவில்கள் முன் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு பின்னர் தற்போது கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து உபயோகித்து கோவிலுக்கு சென்று வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது