வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

சபரிமலை கோவிலில் இன்று முதல் 10 பக்தர்களுக்கு அனுமதி: கேரள அரசு அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று முதல் 5 நாட்களுக்கு திறக்கப்பட்டது என்பதும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்து இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கேரள அரசு தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் நேற்றைய முதல் நாளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததை அடுத்து இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதி என்று கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
ஜூலை 21ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் திறந்து இருக்கும் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.