திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (12:44 IST)

பக்தர்கள் இன்றி நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்!

பக்தர்கள் இன்றி நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்!
உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் பக்தர்களின் இன்றி நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஒவ்வொரு ஆண்டும் பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு கொரோஆ வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்கள் இன்றி பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை துவங்கியது. இந்த ரதயாத்திரையில் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் வரலாற்றில் முதல் முறையாக ரதயாத்திரை பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய அரசு அளித்த விதிமுறையின் படி ரதயாத்திரை தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன
 
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை முன்னிட்டு ஒரிசா கடற்கரையில் 6.2 அகலம் கொண்ட மணல் சிற்பத்தை ஒருவர் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது