1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dayalu ammaal worry about karunanithi

அவரை என்னிடம் கொடுங்கள் ; நான் பார்த்துக்கொள்கிறேன் : கதறிய தயாளு அம்மாள்

Karunanithi
திமுக தலைவரின் கருணாநிதியின் உடல்நிலையைக் கண்டு அவரின் மனைவியான தயாளு அம்மாள் கண்ணீர் வடித்து வருகிறார்.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 
 
அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறமுடியும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  சற்று நேரத்திற்கு முன்னர் வெளியான அறிக்கையில் “கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. முக்கிய உறுப்புகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று காலை கருணாநிதியை சந்திக்க அவரின் மனைவி தயாளு அம்மாள் அழைத்து வரப்பட்டார். அப்போது, என் கணவரை என்னிடம் கொடுங்கள். அவரை நானே பார்த்துக்கொள்கிறேன் என அவர் கண்ணீர் விட்டு கதறினாராம். அவருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின், தலைவருக்கு ஒன்றுமில்லை அவர் நன்றாக இருக்கிறார் என்று கூறி தயாளு அம்மாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக்குகளை மூட உத்தரவு