1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (16:56 IST)

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்; மருத்துவ அறிக்கையில் தகவல்

தற்பொழுது வெளியான மருத்துவ அறிக்கையில் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 4 நாட்களுக்கு பிறகு நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 
 
அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.  சற்று நேரத்திற்கு முன்னர் 5 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்பொழுது மருத்துவ அறிக்கை வெளியானது. அதில், கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. முக்கிய உறுப்புகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.