1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. senthil balaji said dont know in cbi enquiry

தெரியாது.. விஜய்தான் காரணம்!. சிபிஐ விசாரணையில் மழுப்பிய செந்தில் பாலாஜி!..

senthil balaji
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவர் பிரச்சார வாகனத்தின் மேல் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் மயக்கமடைந்தனர். அவர்களில் பலரும் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே உயிரிழழந்தனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது விஜய் அங்கிருந்து கிளம்பி சென்னை சென்று விட்டார். தவெக நிர்வாகிகளும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.. இதையடுத்து மக்களுக்கு திமுகதான் உதவுகிறது. தவெகவினரும், அந்த கட்சியின் தலைவர் விஜயும் ஓடிவிட்டனர் என திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.

ஆனால் தவெகவினரோ திமுகவை குற்றம் சாட்டினார்கள். கூட்டத்தில் சூழ்ச்சி செய்து கலவரத்தை உண்டாக்கினார்கள். வேண்டுமென்றே கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வண்டியை உள்ளே விட்டார்கள்.. அதனால்தான் நெரிசலில் பலரும் சிக்கினார்கள். சம்பவம் நடந்தவுடனேயே செந்தில் பாலாஜி எப்படி மருத்துவமனைக்கு வந்தார்?.. என்றெல்லாம் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு பின்னணியில் திமுக இருப்பதாக விஜயும், தவெகவின் முக்கிய நிர்வாகிகளும் நம்புகிறார்கள். சிபிஐ வாக்குமூலத்தில் அவர்கள் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி செந்தில் பாலாஜியை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சிபிஐ அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி ‘தெரியாது’ என்று மட்டுமே பதில் சொன்னாராம். மேலும் கூட்டத்தில் சதியை ஏற்படுத்தியதாக தவெக நம்பும் 5 பேரின் புகைப்படங்களை காட்டி ‘இவர்களை உங்களுக்கு தெரியுமா?’ என்று கேட்டதற்கு அதற்கும் ‘எனக்கு தெரியாது’ என்று சொல்லியிருக்கிறார்..  கரூர் சம்பவத்திற்கு முக்கிய காரணம் விஜய் மட்டுமே என்பது போலவே செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
எனக்கு ஐஜி-ய தெரியும்!. விஜய் திமுகவை எதிர்ப்பதும் இப்படித்தான்!.. ரஞ்சனா நாச்சியார் நக்கல்!...