செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 மே 2022 (15:19 IST)

இந்தியா இலங்கை போலவே உள்ளது..! – ராகுல்காந்தி பதிவிட்ட மேப்!

Rahul Gandhi
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் இந்திய நிலவரமும் இலங்கை போலவே உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் குதித்த மக்கள் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் தீ வைத்தனர்.

மக்கள் போராட்டத்தால் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகி தலைமறைவான நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது இலங்கை – இந்தியாவை ஒப்பிட்டு ஒரு வரைபடத்தை ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில் வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, வகுப்புவாத கலவரங்கள் ஆகியவை இந்தியாவிலும், இலங்கையிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒரே மாதிரியாக உயர்ந்து வருவதாக காட்டப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவர் “மக்களை திசைதிருப்புவதால் உண்மை மாறப்போவது இல்லை. இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.