1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ct nirmal kumar releasing white notice about eb

மின்சார துறையில் ரூ.2,47,130 கோடி கடன்!. வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர்!..

ct nirmal kumar
தமிழகத்தின் நிதி பற்றாக்குறை தொடர்பாக ஏற்கனவே வெள்ளை அறிக்கை வெளியான நிலையில் தற்போது தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிடி நிர்மல் குமார் மின்வாரியத்தின் நிதி, செலவீனங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்திற்கு 13 லட்சத்து 18 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக சொல்லப்பட்டது. அதிலும் தமிழகத்தில் வசிகும் ஒவ்வொரு தலையிலும் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக சொல்லப்பட்டது..

இந்நிலையில்தான் மின்சாரத் துறையில் நிலுவை கடனாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 830 கோடி இருப்பதாக அமைச்சர் சிடி நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார். பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடனான 3,18,171 கோடியை கணக்கிடும் போது மின்சார துறையின் கடன் அளவு 76.6 சதவீதமாகும்.

மின் துறையில் 1,40,63 பணியிடங்கள் இருப்பதாகவும் அதில் 74,714 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.  இன்னும் 65,921 காலி பணியிடங்கள் நிரப்பபட வேண்டும் எனவும் அவர் கூறினர். ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தாலும் மக்களுக்கு பிரச்சனை இல்லாமல் சேவைகளை செய்து வருகிறோம்.. 2021 - 26 முதல் திமுக ஆட்சி காலத்தில் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்திருக்கிறார்கள். அதேபோல் 9136 பேர் ஓய்வு பெற்றனர். கடந்த திமுக ஆட்சி காலத்தில்வளர்ச்சியை நோக்கி எந்த ஒரு திட்டமும் துவங்கப்படவில்லை’ என சிடி நிர்மல் குமார் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
விஜய்யின் சட்டமன்ற பேச்சை தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் மொழி பெயர்க்கும் நெட்டிசன்கள்.. தென்னிந்தியாவே பரபரக்குது...