1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 9 ஜூலை 2020 (12:42 IST)

அடுத்து மதுரையில் மையம் கொள்கிறதா கொரோனா? ஒரே நாளில் இவ்வளவு பேரா?

கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது மதுரை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டிய வடமாவட்டங்களில் ஆரம்பம் முதலே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதனால் அங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் மதுரையிலோ இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அம்மாவட்டத்தில் நேற்று மட்டும் 310 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இதுவரை இம்மாவட்டத்தில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

இதன் மூலம் மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53000 ஐ கடந்துள்ளது. 1600 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்ப, 3800க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து அதிகளவில் மக்கள் மதுரைக்கு சென்றதன் மூலமாகவே அங்கு கொரோனா பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.