திங்கள், 4 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 ஜூலை 2020 (11:55 IST)

ஆசியக் கோப்பையை ரத்து செய்த பிசிசிஐ… கடுப்பில் பாகிஸ்தான் – என்ன காரணம்!

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசியக் கோப்பையை ரத்து செய்வதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 20 ஓவர் தொடராக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தானில் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதை விரும்பாத பிசிசிஐ ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடத்த சொல்லி வற்புறுத்தியது.

இந்நிலையில் இப்போது கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதால் எப்படியாவது அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக ஐபிஎல்லை நடத்த திட்டமிட்டுள்ளது பிசிசிஐ. அதனால் செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசியக் கோப்பைத் தொடரை ரத்து செய்துள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.