திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஜூலை 2020 (10:46 IST)

முதல்வருக்கும் கொரோனா இருக்க வாய்ப்பு: சோதனைக்கு உட்படுத்தப்படுவாரா?

அமைச்சர் தங்கமணியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நடத்தியதால் முதல்வர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என தெரிகிறது. 
 
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிமுக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஐந்து பேருக்கும், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. 
 
இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  
 
தொற்று உறுதியாகும் முன்னர் வரை, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஐவர் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உள்ளிடோர் கலந்துகொண்டனர். 
 
மேலும் அமைச்சர் தங்கமணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முன்னெச்சரிக்கையாக  முதல்வருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.