சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு – ஆறுதல் அளிக்கும் செய்தி!
சென்னையில் கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரி லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தலைநகர் சென்னையில் பாதிப்பு மிக மிக வேகமாக கடந்த சில வாரங்களில் இருந்தது. அதனால் அங்கு கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து தற்போது அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 1 முதல் 20 வரை கொரோனா இரட்டிப்பு விகிதம் 20 நாட்களில் நடந்தது. ஆனால் தற்போது இரட்டிப்பு எண்ணிக்கை 25 நாட்களாக உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களில் இப்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது வருத்தமளிக்கும் செய்தியாக உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 3 நாட்களாக சென்னையில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.