தொடர்புடைய செய்திகள்
- சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. காங்கிரஸ் தீர்மான நோட்டீஸ்..!
- விஜய்யை நடிகராக பார்க்கவில்லை.. அவர் ஒரு மிகச்சிறந்த அரசியல் சக்தி.. பிரவீன் சக்கரவர்த்தி
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்!.. விஜய் மாஸ்!.. அடுத்தடுத்து குண்டு வீசும் பிரவீன் சக்ரவர்த்தி...
- விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?
- அண்ணாமலை விலகலால் பாதிப்பு இல்லை: தமிழக பாஜக.. பின்னடைவு தான்: கர்நாடக பாஜக
எம்.பி ஆகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!.. விஜய் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்!...
தமிழக அரசியலைப் பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து வந்தது. ஆனால் தங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸுல் குரல் எழுந்தது.
குறிப்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் இதுபற்றி பேசினார்கள். மேலும், இதை கொடுப்பதாக சொன்ன தவெகவிடம் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக தலைமை ஏற்கவில்லை.
ஆனாலும் டெல்லி தலைமை சொன்னதால் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. 28 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒருபக்கம் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அந்த கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது.
இந்நிலையில், தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பிரவீண் சக்கரவர்த்திக்கு எம்.பி. பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி தற்போது வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில், தேர்தல் அதிகாரி தேன் மொழியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி.
