திமுக அரசு செய்யாததை செய்த தவெக அரசு.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.. நீதிமன்றத்திலும் தகவல்...!
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, திமுக முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த விவகாரத்தில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழங்கிய முக்கியத் தரவுகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையிலேயே, முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த வழக்கை தொடர்ந்து, அடுத்தகட்டமாக அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே திமுகவின் பல முக்கியப் புள்ளிகள் மத்திய, மாநில அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் நிலையில், மூத்த தலைவரான கே.என். நேரு மீதான இந்த லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
Edited by Siva
