1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (17:02 IST)

மோடியை கொலை செய்ய தயாராக இருங்கள்.. காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

modi
மோடியை கொலை செய்ய தயாராக இருங்கள் என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ராஜா படேரியா என்பவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் வரும் தேர்தலில் பாஜகவுக்கு முடிவு கட்டவேண்டும் என்றால் மோடியை கொலை செய்ய தயாராக இருக்கவேண்டும் என்று தெரிவித்தார். 
 
மோடி வெற்றி பெற்றால் ஜாதி மதம் பிரிவினை ஏற்படும் என்றும் சிறுபான்மையினருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமென்றால் மோடியை கொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 
 
இது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் மோடியை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் கொல்ல வேண்டும் என்று கூறினேன் என்றும் கொலை செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
Edited by Siva