வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (23:30 IST)

இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி

இமாச்சல பிரதேசத்தில்  நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வந்த  நிலையில், கடந்த நவம்பர் மாதம் 68 இடங்கள் கொண்ட சட்டசபைத்தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டது.

இந்த தேர்தல் முடிவுகள் இன்று நடந்தது. இதில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில், 40 இடங்களை (43%09 ) காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜக 24 தொகுதிகளைக்( 43%) கைப்பற்றிய்டது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

 
எனவே, காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

Edited By Sinoj