1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (14:01 IST)

இமாச்சல பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் க்விந்தர் சிங் சுகு: ராகுல், பிரியங்கா பங்கேற்பு!

himachal
இமாச்சல பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் க்விந்தர் சிங் சுகு: ராகுல், பிரியங்கா பங்கேற்பு!
இமாச்சல பிரதேச மாநிலத்தில் க்விந்தர் சிங் சுகு என்பவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
சமீபத்தில் நடந்த இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் வேட்பாளராக க்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்ட நிலையில் சற்று முன் அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்
 
க்விந்தர் சிங் சுகு முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் பிரமுகர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran