1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (16:58 IST)

நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? கலெக்டர் அறிவிப்பு!

holiday
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இன்று கூட காஞ்சிபுரம் விழுப்புரம் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில் நாளை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்து வேறு எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva