அண்ணாமலை என்ன திருவண்ணாமலையா? திருநாவுக்கரசர் ஆவேசம்
அண்ணாமலை என்ன திருவண்ணாமலையா? என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குறித்து காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர் காட்டமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் அண்ணாமலை சொல்வது என்ன வேதவாக்கா? என்றும் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்றும் அவர் அரசியல் செய்வதற்காக புழுதி வாரித் தூற்றி வருகிறார் என்றும் அண்ணாமலை என்ன திருவண்ணாமலையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் அறநிலையத் துறையில் உள்ள அதிகாரிகள் ஆக இருக்கட்டும் மடாதிபதிகள் ஆதினங்கள் என அவரவருக்கு சில அதிகாரங்கள் உள்ளன. அதேபோல் அரசுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது உரிமை உண்டு என்றும் அதனால் அவர்கள் அளவோடு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்