1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 ஜூன் 2022 (14:34 IST)

சோனியாவா? மம்தாவா? குழப்பத்தில் ஸ்டாலின் - ஆலோசனையின் முடிவு என்ன?

முக ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசன நடத்தியதாக தகவல். 

 
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த மம்தா பானர்ஜி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருப்பதாகவும் ஜூன் 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இதோடு ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொள்ள துவங்கி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடமும் கம்யூனிஸ்டு தலைவர்களிடமும் பேசி வருவதாக தெரிகிறது.
 
இந்நிலையில் முக ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு , முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராஜா, பொன்முடி ஆகியோருடன் அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டார்.

காங்கிரஸை ஆதரிப்பதா அல்லது மம்தாவுடன் கைகோர்ப்பதா என முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றதாக கூறப்படும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் கட்சி தரப்பில் வெளியிடப்படவில்லை.