1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Coimbatore police attack in a hotel

கோவையில் உணவகத்தில் சாப்பிட்டவர்களை அடித்த போலீஸ்! – வீடியோ வைரலானதால் பரபரப்பு!

Tamilnadu
கோவையில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த பெண்கள் உட்பட சிலரை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முன்னதாக உணவகங்கள் 9 வரை செயல்படலாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட 11 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இரவு 10.30 மணியளவில் பயணிகள் சிலர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் உணவகத்தை மூட சொல்லியதுடன், உணவருந்தி கொண்டிருந்தவர்களையும் லத்தியால் தாக்கினார். இதனால் பெண் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். 11 மணி வரை உணவகங்கள் இயங்க அனுமதி உள்ள நிலையில் 10.30 மணியளவில் காவலர் இந்த தாக்குதலை நடத்தியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகியுள்ள நிலையில் பலர் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
10.45 கோடி கொரோனா தடுப்பூசி போட்டாச்சு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்