1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Coimbatore, Nilgris have heavy rain today

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் ஆகஸ்டு 30 வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி  ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை நீலகிரி பகுதிகளில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும், செப்டம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகத்தி வடக்கு கடற்கரையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆர்.எம்.வீரப்பன் பேத்தி திருமணம்: முதல்வர் கலந்து கொண்டார்!