திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (09:00 IST)

நடுக்கடலில் நாட்டு வெடிக்குண்டு? மீனவர்கள் மோதல்! – 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு!

புதுச்சேரியில் இரண்டு கிராம மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு கிராம மீனவர்கள் இடையே சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பது குறித்து மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நல்லவாடு மீனவர்கள் சுருக்குமடியை பயன்படுத்தி மீன்பிடித்தபோது வீராம்பட்டினம் மீனவர்களோடு மோதல் ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து இரு கிராம மீனவர்களும் படகுடன் படகை மோதியும், நாட்டு வெடிக்குண்டை வீசியும் மோதலில் ஈடுபட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக ரோந்து சென்று துப்பாக்கியால் மேலே சுட்டு சண்டையை நிறுத்தி அவர்களை திரும்ப அனுப்பியுள்ளனர்.

மேலும் மீண்டும் மோதல் தொடரலாம் என்ற நிலை உள்ளதால் நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் ஆகிய மூன்று கிராமங்களில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.