1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Srilankan refegee camp name changed By Tn Govt

இனி அகதிகள் முகாம் இல்ல.. மறுவாழ்வு முகாம்! – தமிழக அரசு அரசாணை!

Tamilnadu
தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமை இனி மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றி அரசாணை வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஈழ தமிழர் அகதிகள் முகாம் சாலைகள், வீடுகள் சீரமைத்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.

மேலும் இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
காபூல் விமான நிலையம் தாக்கப்படலாம்! – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!