தொடர்புடைய செய்திகள்
- வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம்: அதிரடி உத்தரவு
- ஊழியர்களோடு போராட்டத்தில் இறங்கிய சீமான் - என்ன ஆனது?
- நூல் விலை உயர்வை கண்டித்து 2வது நாளாக வேலைநிறுத்தம்: திருப்பூர் மக்கள் அதிருப்தி!
- குழந்தை இறந்தாலும் மகப்பேறு விடுப்பு செல்லும்! – தமிழக அரசு விளக்கம்!
- இலங்கையில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்
ரேசன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்தம்: மாற்றுப்பணியாளர்களை நியமிக்க திட்டம்!
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதை அடுத்து மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகளை திறக்க கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பொது மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
குறிப்பாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய அந்தந்த மண்டல இணைப்பதிவாளர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
