சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் ரத்து! – வீடியோவை நீக்க உத்தரவு!
முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூட்யூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மதுரை கிளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதற்காக யூட்யூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், முதல்வர் குறித்து அவதூறாக பேச மாட்டேன் என அவர் உறுதியளித்ததன் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் சாட்டை துரைமுருகன் உறுதியளித்ததை மீறி அவதூறு கருத்துகளை பேசியதாக அரசு தரப்பு ஜாமீனை எதிர்த்து முறையீடு செய்தது, இதனால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த மதுரை கிளை நீதிமன்றம், மேலும் ”சேனல் ஒப்பந்த விதியை மீறினால் வீடியோவை நீக்கவும், சேனலை முடக்கவும் செய்யலாம். நடவடிக்கை எடுக்காவிட்டால் சமூக வலைதள நிறுவனமும் குற்றவாளியே. நடவடிக்கை எடுக்க தவறும் சமூக வலைதளங்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம்” என தெரிவித்துள்ளது.