திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (08:47 IST)

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம்: அதிரடி உத்தரவு

ration
நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தமிழக அரசிடமிருந்து எச்சரிக்கை வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்கள் தினந்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது
 
வேலை இல்லை என்றால் சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யவும் கூட்டுறவு துறை மண்டல பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது