தொடர்புடைய செய்திகள்
- பொறியியல் படிப்புக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு.. விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..
- விஜய்க்கு போட்டியாக சூர்யா வந்துவிடுவாரோ என்ற பயமா? சூர்யா பேனரை அகற்றிய போலீஸ்..
- சென்னை திரும்புகிறார் எவ வேலு.. நாளை லஞ்ச ஒழிப்புதுறை முன் ஆஜராவாரா?
- நாளை முதல் மழையெல்லாம் கிடையாது.. அக்கினி வெயில் போல் சுட்டெரிக்க போகுதாம்...
- டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10. தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவு
சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக 42 கூடுதல் பேருந்துகள்: தமிழக முதல்வர் விஜய் உத்தரவு...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 41 பள்ளிகளுக்கு பயன்படும் வகையில், நாளொன்றுக்கு 42 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் மொத்தம் 84 நடைகள் இயக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி நேரங்களில் மாணவர்கள் நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்க, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்களின் பயண நேரம் மிச்சமாவதுடன், எவ்வித சிரமமும் இன்றி பாதுகாப்பாக பள்ளிக்கு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து துறையின் இந்த சிறப்பான முடிவை வரவேற்று, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழக முதல்வருக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். அரசு நிர்வாகத்தின் இந்த உடனடி நடவடிக்கை, மாணவர்களின் கல்வி சூழலை மேம்படுத்துவதில் முதல்வர் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துவதாகப் பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.
Edited by Siva
