சிங்கப்பெண் விழா ரத்து!.. ஜெகதீஷ் இல்ல விழாவுக்கு போன முதல்வர்!.. கொதிக்கும் நெட்டிசன்கள்!..
முதலமைச்சர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பவர் ஜெகதீஷ். ரூட் என்கிற நிறுவனத்தை துவங்கி விஜயின் மேனேஜரான மாறினார். பல நடிகர், நடிகைகளின் கால்ஷீட்டையும் கவனித்து வந்தார். விஜய் அரசியல் கட்சியை துவங்கிய கடந்த இரண்டு வருடங்களாகவே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விஜயை புரமோட் செய்தார். இதற்காகவே பலரையும் வேலைக்கு அமர்த்தி விஜய் பற்றியும் தவெக பற்றியும் சமூக வலைத்தளங்களில் புகழ் பாடினார்கள். இன்ஸ்டாகிராம் சென்றாலே விஜய் தொடர்பான வீடியோக்கள்தான் அதிகமாக இருந்தது.
அது தேர்தலில் நல்ல ரிசல்ட்டையும் கொடுத்தது. தற்போது விஜய் தமிழக முதல்வராக மாறிவிட்ட நிலையில் விஜயின் வலதுகரம் போல ஜெகதீஷ் செயல்படுகிறார். தலைமை செயலகத்தில் கூட அவரை பார்க்க முடிகிறது.. சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க விஜய் டெல்லி சென்றபோது தனி விமானத்தில் விஜயுடன் ஜெகதீசும் சென்றார்..
ஒருபக்கம், விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின் தமிழகப் பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையின் சிங்கப்படை என்கிற துறை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. பெண்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்த பெண் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சொல்லப்பட்டது. இன்று காலை சிங்கப்படை தமிழக அரசால் துவங்கி வைக்கப்படவிருந்தது.
ஆனால், இந்த விழாவை துவங்கி வைக்க இன்று காலை முதல்வர் விஜய் வரவில்லை. இதனால் விழா ரத்து செய்யப்பட்டது. அதேநேரம் இன்று காலை பட்டு வேட்டி அணிந்து ஜெகதீசின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலை தினங்களில் வெளியானது..
இதனையடுத்து சில லட்சம் செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அரசு விழாவை ரத்து செய்துவிட்டு ஜெகதீஷ் போன்றவரின் நிகழ்ச்சிக்கு விஜய் செல்கிறார் என்றால் அவர் இந்த ஆட்சியை எவ்வளவு மதிக்கிறார் என புரிந்து கொள்ள வேண்டும்.. எனக்கு ஆதரவு கொடுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.. ரூட் மாபியா இருக்கிறது.. என்னை நம்பும் மக்கள் கூட்டம் இருக்கிறது.. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிற மனநிலையில்தான் விஜய் இருக்கிறார் என சமூகவலைத்தளங்களில் நெட்டிசனங்களும் திமுகவினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.