1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay going to do changes in tvk ministry

அமைச்சரவையில் மாற்றம்!.. 7 பேரின் அமைச்சர் பதவி காலி?!.. லிஸ்ட் எடுக்கும் முதல்வர் விஜய்!..

vijay
தமிழகத்தில் தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் 60 வருடங்களுக்கு பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியும் மலர்ந்திருக்கிறது.
விஜயின் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகளாக இருந்த பலரும் தற்போது  எம்.எல்.ஏக்களாக மாறியிருக்கிறார்கள். அதில் சிலர் அமைச்சர்களாக மாறியுள்ளனர்.

முதல் முறை எம்.எல்.ஏ, அதிலும் முதல் முறை அமைச்சர் என்பதால் பலருக்கும் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார்கள். அதே நேரம் போகப் போக அவர்கள் தங்கள் பொறுப்பையும், துறையையும் உணர்ந்து அவர்களின் பணி மற்றும் அரசியலை கற்றுக்கொள்வார்கள் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்..

இந்நிலையில்தான் சமீபத்தில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள கில்லி சரத் போதை பொருளை தயார் செய்வது போல ஒரு வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கையில் எடுத்த திமுக போராட்டம் கூட செய்தது.. ஆனால் இதுவரை அவர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேநேரம் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையில் சிக்குபவர்கள் பட்டியலை முதல்வர் விஜய் எடுத்து வருகிறாராம்.. ஒருபக்கம் தங்களின் உதவியாளர்கள், உறவினர்களை துறைக்குள் ஆதிக்கம் செலுத்த விட்டு வேடிக்கை பார்க்கும் அமைச்சர்களின் பட்டியலும் தயாராகி வருகிறதாம். அனேகமாக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் நிச்சயமாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்.. அனேகமாக ஏழெட்டு பேரின் அமைச்சர் பதவிகள் பறிபோகும்’ என்கிறது தவெக வட்டாரம்.
அடுத்த கட்டுரையில்
5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்!.. 200 பேருந்தில் வந்து தவெகவில் இணையும் அதிமுகவினர்!...