மிக்சர் சாப்பிடாம சட்டம் ஒழுங்கை பாருங்க!.. விஜயை விளாசிய உதயநிதி...
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெறுகிறது.. அதுவும் பட்டப்பகலில் கும்பலாக வந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பித்து சென்று விடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்தாலும் இது போன்ற கொலைகள் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். சட்டசபையில் கூட சட்டஒழுங்கு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் எழுதிய எந்த கேள்விக்கும் முதலமைச்சர் பதில் கூறவில்லை..
நேற்று கூட சென்னை திருவல்லிக்கேணியில் அஜித் என்கிற வாலிபர் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட பகை காரணமாக வீட்டின் அருகே அவரின் தயாரின் கண் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் ‘பட்டப் பகலில் இரட்டை கொலை உட்பட இரண்டு நாட்களில் 9 கொலைகள்.
இப்படி கொத்து கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக முதலமைச்சர் நடத்துகிறார்? இனியும் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்..