1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm joseph vijay doing compaign in dharapuram

இன்று தாராபுரத்தில் விஜய் பிரச்சாரம்!.. 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!...

vijay
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதால் அங்கு பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. திமுக, தவெக, அதிமுக போன்ற கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.

தவெகவை பொறுத்தவரை ஏற்கனவே முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் இன்று தாராபுரம் சித்ராவுத்தன் பாளையத்தில் மாலை 3 மணியளவில் அவர் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். இதற்காக அங்கு ஒரு மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு விஜய் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுராந்தகத்தை போலவே தாராபுரத்திலும் QR கோட் அனுமதி சீட்டுள்ள 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனுமதி சீட்டு இல்லாதவர்களுக்கு நிகழ்ச்சியில் அனுமதி இல்லை, கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் கண்டிப்பாக வர வேண்டாம், குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது ,அனுமதி சீட்டு இல்லாதவர்கள் பிரச்சாரத்தை தொலைக்காட்சியில் கண்டு களியுங்கள் என தவெக சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!.. தபால் வாக்குகள் பதிவு...