தொடர்புடைய செய்திகள்
- ''கல், கிரஷர் மற்றும் எம். சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காணத் துடிக்கும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு''- இபிஎஸ் கண்டனம்
- விஞ்ஞான முறையில் மூடப்படும் அம்மா உணவகங்கள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!
- அரசுப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி...
- இந்தித் திணிப்பு சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் - அமைச்சர் உதயநிதி
- TNPSC- 30,000 பேருக்கான வாய்ப்புப் பறிபோயுள்ளது- திருமாவளவன் டுவீட்
குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட விவகாரம்- டிடிவி தினகரன் டுவீட்
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில்,
''குறை பிரசவத்தில் பிறந்த ஒன்றரை வயது குழந்தைக்கு மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது. நீர்க்கசிவை கட்டுப்படுத்த ஐந்து நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டதால் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ம் வலது கை முழுவதும் பரவியதால் கையை அகற்றும் நிலை ஏற்பட்டது ''என்று தெரிவித்தது.

இந்த விவகாரம் பற்றி டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

Hydrocephalus என்ற பாதிப்பின் காரணமாக தலையில் இருந்து நீர் வடிந்ததால் அந்த குழந்தைக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த நிலையில், தவறான சிகிச்சையால் வலது கை பாதிக்கப்பட்டு, கை அகற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தவறு ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனைகளில் இது போன்ற தவறான சிகிச்சைகள் நடந்துவருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆகவே, மக்கள் உயிர் சார்ந்த இந்த பிரச்னையில் அலட்சியம் காட்டாமல் இந்த தவறுகள் நடப்பதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்நாடு அரசு அறிய வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன், அரசின் சார்பில் நிவாரண உதவிகள் அளிக்க முதலமைச்சரை வலியுறுத்துகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.