திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 3 ஜூலை 2023 (15:20 IST)

கோடரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கிய நபர்!

வேலூர் அடுத்த ஊசூர் பகுதி அணைகட்டு சாலையில் நூருல்ல என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ளது தனியார் நிறுவனத்தின் ATM மையம் (இண்டிகேஷ்). இந்த ஏடிஎம் மையத்தில் செயல்பாட்டில் உள்ள ஒரு இயந்திரம் புதியதாக வைக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரம் என இரண்டு இயந்திரங்கள் உள்ளது.  
 
இந்நிலையில் இன்று காலை 9.00 மணி அளவில் ஏடிஎம் மையத்தில் இருந்து உடைக்கப்படுவது போன்ற பலத்த சத்தம் வந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது முதியவர் ஒருவர் விறகு வெட்டும் கோடாரியால் ஏடிஎம் மையத்தை உடைத்துக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து அரியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த அரியூர் காவல் துறையினர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக்கொண்டிருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்தப்பட்ட கோடாரியையும் பறிமுதல் செய்தனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர் ஊசூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி (53) என்பதும் அவர் சற்றே மனநல நிதானம் இல்லாதவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இருந்த போதும் ஏடிம் இயந்திரத்தை உடைத்து நொருக்கியதற்க்காக நோக்கம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சியில் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு முக்கிய சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரம் உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.