1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 10 ஜூன் 2023 (17:03 IST)

TNPSC- 30,000 பேருக்கான வாய்ப்புப் பறிபோயுள்ளது- திருமாவளவன் டுவீட்

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகள் டிஎன்பிஎஸ் சியில் அறிவிப்பே இல்லாத நிலையில் 30,000  பேருக்கான வாய்ப்புப்  பறிபோயுள்ளது. இதனால், தற்போதைய அறிவிப்பு  போட்டித் தேர்வு எழுதும் வேலை தேடுநர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:  
 
''#TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் #Group_4  நான்காம் வகை பணிகளில் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.
 
வழக்கமாக ஆண்டுதோறும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால்,கடந்த மூன்றாண்டுகள் அறிவிப்பே இல்லாத நிலையில் 30,000  பேருக்கான வாய்ப்புப்  பறிபோயுள்ளது. இச்சூழலில், தற்போதைய அறிவிப்பு  போட்டித் தேர்வு எழுதும் வேலை தேடுநர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
 
எனவே, தமிழ்நாடு அரசு மேலும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் கூடுதலாக அறிவிப்பு செய்யுமாறு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.''என்று தெரிவித்துள்ளார்.