இந்தித் திணிப்பு சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் - அமைச்சர் உதயநிதி
இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் - இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும் - இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும்" என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உதட்டளவில் தமிழ் - தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று வரும்போது இந்தியை திணிப்பது என்ற ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாடையும், ஆதிக்க இந்தியையும் தமிழ்நாடும் - தி.மு.கழகமும் ஒருபோதும் அனுமதிக்காது.
தனது இந்தித்திணிப்பு சுற்றறிக்கையை நியூ இந்தியா அசூரன்ஸ் உடனே திரும்பப்பெற வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.