1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Children got arrested for cell phone theft

போதை மருந்துக்காக செல்போன் திருட்டு: டிக்டாக்கில் சிக்கிய சிறுவர்கள்!

Tamilnadu
சென்னையில் போதை பொருள் வாங்குவதற்காக செல்போன் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் டிக்டாக் வீடியோவால் போலீஸில் சிக்கியுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஐடி ஊழியரை தாக்கி மர்ம கும்பல் ஒன்று செல்போன் திருட்டில் ஈடுபட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் விசாரணையின்போது இதே கும்பல் தி.நகரிலும் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் முயற்சித்து வந்தனர்.

இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சமீபத்தில் டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டு உள்ளனர். அதை வைத்து போலீஸார் அந்த கும்பலை பிடித்தது. அதில் இருந்தவர்களெல்லாம் 16, 17 வயதுடைய சிறுவர்கள். போதைக்குய் அடிமையான அவர்கள் போதை பொருட்கள் வாங்குவதற்காக செல்போன் திருட்டில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுவர்களுக்கு போதை பொருட்களை விற்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
போகி பண்டிகையில் பிளாஸ்டிக் எரிக்க தடை! – கண்காணிப்பில் காவல்துறை!