சிறப்பு பேருந்துகள் மூலம் 9 கோடி வருவாய்: 4 லட்சம் பேர் பயணம்!
பொங்கலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் அரசுக்கு 9.55 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நகரங்களில் வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக தமிழகம் முழுவதும் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. கடந்த 3 நாட்களில் இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் 4.25 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.9.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாளை போகி அன்று பலர் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள், மேலும் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் சமயங்களிலும் மக்கள் அதிகம் பயணிப்பார்கள் என்பதால் வருவாய் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.