சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து ஒரு கடையை அகற்ற உத்தரவு:
சென்னையில் நடைபெற்று வரும் புத்தக் கண்காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாக ஏற்பட்ட சர்ச்சையில் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் விற்பனை செய்யப்பட்டதால் அந்த புத்தகக்கடையை உடனே அகற்றுமாறு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:
புத்தகக் காட்சிக்கு அரங்கம் விண்ணப்பிக்கும்போது பபாசியின் விதிகளுக்கு உட்படுவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தோம். நீங்களும் அந்த விதிகளுக்கு ஒப்புக்கொண்டு விண்ணப்பித்து இருந்தீர்கள். அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக நீங்கள் உங்கள் கடையில் சர்ச்சைக்குரிய புத்தகத்தை விற்பது விதிமீறலாகும். ஆகவே நீங்கள் தொடர்ந்து புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வதை எங்கள் அமைப்பு தடை செய்கிறது. தங்கள் கடையை உடனடியாக கற்றுக் கொள்ளும்படி அறிவித்து விடுவோம்’ என்று கூறப்பட்டிருந்தது
இதனையடுத்து நேற்று அன்பழகன் கைது செய்யப்பட்டார் என்பதும் இந்த கைதுக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது