திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (14:43 IST)

”தலைவருக்கான பட்டியலில் நானும் உள்ளேன்”..எஸ்.வி.சேகர்

பாஜக தலைவருக்கான பட்டியலில் தானும் உள்ளதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த தலைவர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர், தமிழக பாஜக தலைவருக்கான பட்டியலில் எனது பெயரும் உள்ளது. தலைவராக நான் நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன்” என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.