தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி விவகாரம்.. மேலும் 2 பேர் கைது..
தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை வீழ்த்த சதி திட்டம் தீட்டியதாக ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதிச்செயலில் தொடர்புடையதாக ஒரு மருத்துவர் உட்பட இருவர் புதிதாக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பின்னணியில் இந்தச் சதி நடந்ததாக குற்றம் சாட்டப்படும் நிலையில், போலீஸ் விசாரணை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தவெக எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதும், அதற்குப் பின்னணியில் இருந்த நபர்களின் தொடர்புகளும் இந்த விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன.
இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ள சூழலில், இந்தச் சதித் திட்டத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, இதன் பின்னணியில் இன்னும் எத்தனை முக்கியப் புள்ளிகள் சிக்கப் போகிறார்கள் என்பது பெரிய மர்மமாகவே நீடிக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த அதிரடி கைது நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
