தொடர்புடைய செய்திகள்
- ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு! ரயில்கள் நின்று செல்லும்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
- குற்றாலத்தில் ஒரே ஒரு அருவியில் மட்டும் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
- வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நிற்கும் 25 பேருந்துகள்: பயணிகளுக்கு உதவும் கிராம மக்கள்!
- ராமர் கோவிலுக்கு முதல் 100 நாட்களுக்கு 1,000 ரயில்கள்: இந்திய ரயில்வே திட்டம்..!
- தெலுங்கு மொழியில் ரயில்வே கேட் பலகை: இந்தியை அடுத்து தெலுங்கு திணிப்பா?
இன்று முதல் தொடங்கியது தூத்துக்குடி-சென்னை ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி
புயல், வெள்ளத்திற்கு பின்னர் தூத்துக்குடியில் இன்று வழக்கம் போல ரயில் சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டதாகவும், குறிப்பாக படுமோசமாக பாதிக்கப்பட்டிருந்த தூத்துக்குடி-மதுரை ரயில் பாதை முழுவதும் சீரமைக்கப்பட்டதாகவும், இதனையடுத்து தூத்துக்குடி-சென்னை ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த 16 மற்றும் 17ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது என்பதும் தண்டவாளங்கள் சேதம் அடைந்ததை அடுத்து கடந்த நான்கு நாட்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பெறும் அவதிக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் போர்க்கால அடிப்படையில் ரயில்வே துறையினர் தற்போது பழுதடைந்த இருப்பு பாதைகளை சரி செய்து மீண்டும் ரயில் சேவையை தொடங்கியுள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
