1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Indian railway special train to ayodhya ramar temple

ராமர் கோவிலுக்கு முதல் 100 நாட்களுக்கு 1,000 ரயில்கள்: இந்திய ரயில்வே திட்டம்..!

ramar temple
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் ஜனவரி 24ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில்  நாடு முழுவதும் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமர் கோவில் திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்து அடுத்து வரும் 100 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை கூறியுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக ரயில்கள் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அயோத்திக்கு நாடு முழுவதிலுமிருந்து செல்லும் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு மற்றும் முன்பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோவில் திறந்தவுடன் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து ரயில்வே துறை இந்த சிறப்பு ரயில் திட்டத்தை  தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு.. அண்ணாமலை அழுத்தம் காரணமா?