தெலுங்கு மொழியில் ரயில்வே கேட் பலகை: இந்தியை அடுத்து தெலுங்கு திணிப்பா?
ரயில்வே கேட்டில் இதுவரை நில் என்ற பெயர் பலகை தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே கேட்டில் தெலுங்கு ஆங்கிலம் ஹிந்தி என்ற மொழிகளில் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஹிந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத்தில் பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வரும் நிலையில் தற்போது தமிழ் மொழிக்கு பதிலாக தெலுங்கு மொழி எழுதப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஊடகங்கள் சுட்டிக்காட்டிய நிலையில் உடனடியாக தெலுங்கு மொழி மேல் நில் என்று தமிழில் ஒரு பேப்பரில் எழுதி ரயில்வே அதிகாரிகள் தற்போது ஒட்டி வைத்துள்ளனர்
பெயர்ப்பலகை எழுதுபவர்கள் செய்த தவறு என்று இதற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்தாலும் தமிழ் மொழியை படிப்படியாக மறைப்பதற்கான சதி நடக்கிறது என்றும் ஹிந்தி திணிப்பை அடுத்து தெலுங்கு திணிப்பும் நடைபெறுகிறதா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran