1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai to tiruvannamalai train postponed

சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மின்சார ரயில் திடீர் ஒத்திவைப்பு.. பயணிகள் அதிர்ச்சி..!

Chennai electric train
இன்று முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மின்சார ரயில் இயக்கப்பட இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இந்த ரயில் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் திருவண்ணாமலை வரை நீடிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று முதல் சென்னை கடற்கரை முதல் திருவண்ணாமலை வரை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
மே இரண்டாம் தேதி முதல் இந்த ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென தேதி குறிப்பிடாமல் இந்த ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
நிர்வாக காரணங்களுக்காக இந்த ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. 
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
சிறையில் இருந்து தேர்தல் பிரச்சாரம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த மனு தள்ளுபடி..!