வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மே 2024 (11:46 IST)

சிறையில் இருந்து தேர்தல் பிரச்சாரம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த மனு தள்ளுபடி..!

Kejriwal
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவர் சிறையில் இருந்தவாறு காணொளி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் இருக்கும் நிலையில் வழக்கறிஞர் அமர்ஜித் குப்தா என்பவர் ’சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் காணொளி வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது .தேர்தல் நடத்தை விதிமுறைக்கு இந்த மனு பொருந்தாது  சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிப்பது சட்டத்துக்கு முரணானது என்றும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்

Edited by Siva