ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2024 (16:06 IST)

திருவண்ணாமலை கோவிலில் வசந்த உற்சவம்: இன்று கொடியேற்றம்.. குவிந்த பக்தர்கள்..!

திருவண்ணாமலை கோவிலில் வசந்த உற்சவம் கொடியேற்றம் இன்று நடைபெற்றது அடுத்து ஏராளமான பக்தர்கள் அதில் கலந்து கொண்டு அருள் பெற்றனர்
 
 திருவண்ணாமலை அருணாச்சலீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வசந்த உற்சவம் பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது
 
இதனை அடுத்து இன்று மாலை மூன்றாம் பிரகாரத்தில் சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் மூர்த்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
 நாளை முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை தினமும் அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெறும் என்றும் ஏப்ரல் 23ஆம் தேதி தீர்த்த வாரி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று நடைபெற்ற வசந்த உற்சவத்த்தின் கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran