1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai teynampet people protest for rescue operation

மழைநீரை அகற்றக்கோரி சென்னையில் போராட்டம்: ஸ்தம்பித்தது முக்கிய சாலை!

சென்னை
மழைநீரை அகற்ற கோரி சென்னையில் திடீரென பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது என்பதும் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூர் சாலையில் மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் அந்த பகுதியில் மின் வினியோகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர் இந்த போராட்டம் காரணமாக திருவள்ளூர் சாலையில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கோவை மாணவி தற்கொலை: கனிமொழி எம்பி ஆவேசம்!