ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (07:53 IST)

இன்றைய (13/11/2021) பெட்ரோல் & டீசல் விலை!

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் திடீரென பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை மத்திய அரசு குறைப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாநில அரசு குறைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. 
 
இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.